Friday, May 29, 2020

அப்துல்கலாம் பேசுகிறார்


அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இரவு வழக்கமான ஜெபமாலையை முடித்துவிட்டு, சற்று முகம் கழுவலாம் என வெளியே சென்றேன்.



அப்பொழுது ஸ்டடி ஹால் முன்பு சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் அன்பு என்று எனக்கு தெரிந்த ஒரு அண்ணனும் நின்று கொண்டிருந்தார்,
அவரிடம் சென்று இங்கே என்ன கூட்டம்? என்ன நடக்கிறது? என்று ஆவலாய் நான் கேட்க, அதற்கு அவர், “வா வா வா வா வா நீயும் எங்களோடு இணைந்து கொள்” என்றார்.
மீண்டும் என்னவென்று நான் கேட்க, "இப்போது அப்துல் கலாம் நம்மிடையே பேசப்போகிறார்!" என்று கூறினார். நான் சற்று வியப்பில் ஆழ்ந்தேன்! ஆனா எப்படி? ஒருவேளை டீவியை இங்குவைத்தே போடுவார்களா! அல்லது ஏதேனும் முக்கிய அறிவிப்பு கொடுக்கப் போகிறார்களா?
அந்த நேரத்தில் கடலூரில் நல்ல மழை பெய்து கொண்டிருந்த காலம் என்பதால் விடுமுறை அறிவிக்கப் போகிறார்கள் என்று ஆவலோடு நான் நின்று கொண்டிருந்தேன்.
ஒருவேளை விடுமுறைவிட்டால் ஜாலியாக வீட்டுக்கு போகலாம். கிளம்பும்போது மழையில்லாமல் இருக்கவேண்டும் என்றெல்லாம் குளிர் கனவு கண்டுகொண்டு நின்றேன்.
அந்த அண்ணன் என்னோடு மிக நெருக்கமாக என் தோளில் கை போட்டபடி மிக பாசமாக நின்றுகொண்டார். திடீரென அந்தக் கூட்டத்தில் எங்களது விடுதி வார்டன் தோன்றி, “அப்படியே இந்த கூட்டத்தில் இருக்கிற எல்லாரும் முட்டி போடுங்க!” என்று கட்டளையிட்டார்.
தப்பு தப்பு மிகக் கடுமையாக கட்டளையிட்டார்.
கூட்டம் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு முட்டி போட ஆரம்பித்தது. நான் என்னவென்று சுதாரிப்பதற்குள், ஏன்டா நாய்களா என திட்டத் தொடங்கினார்.
எனக்கு மிகுந்த அதிர்ச்சி! எதையுமே யோசிக்காமல் அவர் கையை உதறி விட்டு அங்கிருந்து பின்னால் ஓடி, பலர் மீது ஏறி இறங்கி எப்படியோ என் அறைக்குள் வந்து சேர்ந்து விட்டேன்.
இன்னும் அந்த வார்டன் அவர்களை திட்டி கொண்டே இருந்தார்.
நிதானமாக நான் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அடுத்த நாள் அவர்களிடம் என்ன நடந்தது என்று தெளிவாக விசாரித்தபோதுதான் எனக்கு அந்த உண்மை தெரிந்தது.
அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் கிரிக்கெட் விளையாடி,  ஹாஸ்டல் ஃபாதர் அவர்களின் ஜன்னல் கண்ணாடிகளைப் படீரென உடைத்து விட்டனர்! அதற்கு தண்டிக்கும் விதத்தில்தான் வார்டன், அவர்களை ஸ்டடி ஹால் முன்பு நிற்கச்சொல்லி முட்டி போட வைத்து திட்டிக் கொண்டிருந்தார்.
கொஞ்சம் விட்டிருந்தால் அந்தக் கூட்டத்தில் என்னையும் சேர்த்திருப்பார்கள்.
பிறம்பின் சுளிர் முத்தங்கள் ஒருமுறையாவது உங்கள் பின்னங்கால்களை ஸ்பரிசித்திருந்தால், டமால் டு்மீல் என்ற தீபாவளி பட்டாசுகள் உங்கள் பின்னந்தொடைகளில் வெடித்த அனுபவம் இருந்தால் நான் ஏன் அவ்வாறு மனித வேகத்தடைகளை பொருட்படுத்தாது ஓடிவந்தேன் என்று புரியும்.
அன்பு என்று பெயரை வைத்துக் கொண்டு இப்படி வம்புல மாட்டி விட்ட அந்த அண்ணணை நினைச்சு என்ன சொல்றதுனே எனக்குத் தெரியல.
என்ன இருந்தாலும் இன்னொருத்தனை மாட்டி விடுவதில் நம்மவர்களுக்கு  அவ்வளவு சுகம்!
********
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி, கூட்டம் என்றாலெ பிரச்சனைதான்.
எனவே விழித்திருங்கள், விலகி இருங்கள் வீட்டிலிருங்கள்.

21 comments:

  1. மிகச்சரியாக சொன்னீர்கள் அருமை
    மேலும் தொடருங்கள்
    வாழ்க வளமுடன் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம்.

      Delete
  2. ுங்கல் அநுபவ பதிவு நன்ட்றாக ிருன்தது

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  3. உங்கள் இந்த பள்ளி அனுபவம் என்னையும் பள்ளி நினைவுக்கு அழைத்து சென்று விட்டது மிகவும் அருமையாக உள்ளது.அந்த அன்பு அண்ணன் உங்களுக்கு பரம்பின் சுளிர் முத்தத்தால் அன்பு காட்ட நினைத்துள்ளார்.அருமையாக உள்ளது.காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்காக

    ReplyDelete
  4. Nice one bro. School experience stay longer with us. Great flow of language. Keep it up.

    ReplyDelete
    Replies
    1. Thank you so much bro for your Enducing comments it's triggers to write a lot.

      Delete
  5. பிரம்படிய இவ்வளவு அழகாக சொல்லிறுகிங்க

    ReplyDelete
    Replies
    1. ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றிகள். உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஊட்டுகிறது.

      Delete
  6. அருமையான பதிவு நண்பரே நீங்கள் கூட்டம் என்றாலே அந்த கூட்டத்தில் நீங்களும் இருப்பீர்கள் நீங்கள் சற்று குள்ளமாக இருப்பதால் நீங்கள் எளிதாக தப்பிவிடுவார்கள் எனக்கு என்னவோ தப்பிக்கும் தந்திரம் உங்களிடம் உள்ளது என்று சரி உங்கள் போஸ்ட் மிகவும் சிறப்பு நன்றாகவும் இருந்தது

    ReplyDelete
    Replies
    1. டேய் ஓ! பொதுவெலியா, மிக்க நன்றி நன்பரே.

      Delete
  7. கூட்டம் பிரச்சனைதான் தம்பி. நானும் பள்ளியில் கூட்டத்தோடு சிக்கு பிரம்படி வாங்கியிருக்கேன். "இராமன் தேடிய சீதை" படத்தில் சேரன் தன் போலீஸ் மணமகளை ரகசியமாக பார்க்கச்சஎன்று கூட்டத்தில் சிக்கி அவள் கையாலயே லத்தி சார்ஜ் வாங்கிய காட்சியும் நியாபகம் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள், கூட்டம் என்றாளே பிரச்சனைதான். படித்தமைக்கும் கருத்துகளை கூறியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  8. ஃபெர்னாண்டோ எப்படியோ தப்பித்தீர்கள். கூட்டம் எதற்கு என்று தெரியாமலேயே போய்விட்டு...நல்ல காலம்.

    கூட்டம் என்றாலே கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் நினைவுகள் தொடரட்டும். நன்றாக எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள்

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Thank you so much Respected Sir and Madam for your positive comments and encouragements!

      Delete
  9. அன்பு அண்ணன் அன்பு ஒன்னு கொரிந்தியர் பதிமூனில் சொன்ன மாதிரி அன்பு என்னன்னு உங்களுக்கு காட்டிட்டாரே ...

    : )

    இந்த மாதிரி பிரம்படி வாங்கவே பிறந்தவன் நான், ஒவ்வொரு முறையும் இதுவும் கடந்து போகுன்னுமே சொல்லி கடந்து வந்தேன்.

    புன்னகைகைக்க வைத்த பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சார்! உங்கள் வேதாகம மேற்கோளும், ஊக்கமூட்டும் கருத்துக்கலும் மிகுந்த மன நிறைவை தருகிறது.

      Delete