Wednesday, June 10, 2020

மூன்றாம் நதி - விமர்சனம்


மே 24 2016 செவ்வாய்க்கிழமை; மதிய நேரம் என்னுடைய வழக்கமான அலுவலக வேலைகளை
தூக்கக் கலக்கமாக இருந்ததால் சற்று தள்ளி வைத்துவிட்டு முகநூலில் உலாவலாம் என சென்றேன்.
அங்கு எனக்கு தெரிந்த மிக நெருக்கமான ஒரு அண்ணன் ஆன்லைனில் இருந்ததால் அவருடன் அரட்டை அடித்தேன் [Chatting] அப்போது திடீரென அவர் நாளைக்கு எனக்கு திருமணம்
அவசரமாக முடிவாகிவிட்டது என மிகச் சாதாரணமாக சொன்னார். மிகுந்த அதிர்ச்சியும்
குழப்பமுமாய், திருமணங்கள் கூடவா இப்படி திடீரென நிச்சயிக்கப்படுகின்றன?
என்று நான் குழம்பிக் கொண்டு இருக்கும்போது நண்பர் மகேஷிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு; மணிகண்டன் ஒரு புதினம் எழுதுகிறார் என்று.
அத்தனை குழப்பங்களும் அதிர்ச்சிகளும் நீங்கி மகிழ்ச்சியும் ஆச்சரியமும் இன்னும் பல சந்தோஷமான உணர்வுகளும் என்னை ஆட்கொண்டன. என்னது
"நம் மணிகண்டன் நாவல் எழுதுகிறாரா!" என நான் ஆச்சரியத்தில் கேட்டேன்

ஏனென்றால் 2016 ஆரம்பத்தில் நண்பர் மகேஷ் மூலமாக எனக்கு வா. மணிகண்டன் அவர்களும் அவரது நிசப்தம்
வலைத்தளமும் அறிமுகமானது. அவரது எழுத்துக்களும் பதிவுகளும் மிக நேர்த்தியாகவும், அழகாகவும், அழுத்தமாகவும் ஆழமானதாகவும் இருக்கும். அது மட்டுமின்றி அவருடைய
பதிவுகளையும் தளத்தையும் தொடர்ந்து பார்வையிட்டு அதில் நிசப்தம் அறக்கட்டளை பற்றியும்
தெரிந்து கொண்டேன். உண்மையிலேயே மணிகண்டனின் வெளிப்படைத்தன்மையும்,
நேர்மையான அணுகுமுறைகளும் எளிமையான வாழ்வும் அவரை எவ்வளவு தூரம் உயர்த்தி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு நானும் அவருடைய எழுத்துக்கு ஒரு மிகப்பெரிய
ரசிகன் ஆனேன்.

இந்நிலையில்தான் நண்பர் மகேஷ் அவர் ஒரு நாவல் எழுதுகிறார் என்று சொன்னதும் ஆச்சரியத்தில் என் மனம் நிரம்பியது. அதுமட்டுமின்றி நண்பர் மகேஷ் "ஏன் நாம் இதை
படித்துவிட்டுக் கருத்துக்களை கூறக்கூடாது? விமர்சனங்களை எழுதினால் அவரும் சந்தோஷப்படுவார்." என கூறினார். எனக்கு மிகுந்த உற்சாகம்! நிச்சயமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவரிடம் உடனே அனுப்பும்படி கேட்டேன். நண்பர் மகேஷ் ஒலி கோப்பாக மாற்றப்பட்ட அந்த நாவலை எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார். ஆனால் அன்று என்னுடைய அலுவலக நேரம் முடிந்து விட்டதால், வீட்டிற்கு சென்றுவிட்டேன் எனது வீட்டில் போதிய இணைய வசதி அப்போது கிடையாது. ஆனால் மாலை, நண்பர் மகேஷ் என்னை அழைத்து, "விமர்சனத்தை முடித்து விட்டாயா?" எனக்கேட்டார்
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்றேன். ஆனால் அவர் சொன்ன விஷயம் பலர் இப்போது அந்த ஒலி கோப்புகளை தரவிறக்கம் செய்து கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் பலர் மிகுந்த ஆச்சரியத்திலும் பதட்டத்திலும் இருக்கிறார்கள் என்று கூறினார். அதாவது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் எப்படியிருக்குமோ அந்தமாதிரி.
ஆனால் சோகம் என்னவெனில் அன்று மாலை என் உடல்நிலை கொஞ்சம்கொஞ்சமாக மோசமாக தொடங்கியது. அடுத்த நாள் நான்
அலுவலகம் சென்றபோது என்னால் சமாளிக்க முடியாத அளவிற்கு உடல் நலக் குறைபாடு. ஜுரம், லேசான தலை வலி, வயிற்று
வலி இப்படியெல்லாம். ஆனாலும் அந்த ஆர்வத்தில் நான் அந்த ஒலிக்கோப்பை கேட்டு விட்டு என்னால் முடிந்தவரை ஒரு சிறு விமர்சனத்தை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனுப்பி இருந்தேன் ஏனெனில் என்னால் அப்போது தமிழில் தட்டச்சு செய்வதில் எனக்கு சிரமம் இருந்தது எனவே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்த அந்த சிறு விமர்சனத்தை வா. மணிகண்டன் அவர்களுக்கு அனுப்பிவிட்டு அன்று மாலை வீட்டிற்கு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு என்னால் சமாளிக்க முடியாத அளவிற்கு
உடல்நிலை மோசமானது. மே 26 இந்த ஆண்டு எந்த தேதியில் நான் எனது பதிவுகளை பதிவிட தொடங்கினேனோ, எந்த தேதியில்
எனது ப்ளாகை லான்ச்  செய்தேனோ அதே தேதியில் நான்கு வருடங்களுக்கு முன் என் உடல்நிலை மோசமான காரணத்தினால் இப்போது எனது ப்ளாக் [Blog] மக்களிடம் பரவிக் கொண்டிருப்பது போல் என் ரத்தத்தில் ட்ரிப்ஸ் ஏறி பரவிக்கொண்டிருந்தது. உடம்பின் நீற்ச் சத்து குறைந்துபோய்விட்டதாம். ஆனால் மே 27 காலை மகேஷ்
என்னை அழைத்து "நிசப்தம் பார்த்தாயா?" எனக்கேட்டார் நான் இல்லை எனச் சோர்வாக பதில் சொன்னேன். உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது பாரு என கட்டளையிட்டார் அவரது காலை கட் செய்துவிட்டு நிசப்தத்தை
பார்வையிட்டேன் எனது அலைபேசியின் இணையம் மூலமாக. அப்போது நான் அனுப்பியிருந்த விமர்சனத்தையும்
தமிழில் மொழிபெயர்த்து அவருடைய இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.
உண்மையிலேயே உடல் நல குறைபாடுகள் எல்லாம் மறந்து என் ரத்தத்தில் புது உற்சாகம் பரவியது. என் விமர்சனமும்
அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா! என்ற உணர்வே எல்லா உடல்நலக் குறைகளையும் மறக்கச் செய்து என்னை புது மனிதனாக மாற்றியது. யோசித்துப் பாருங்கள் நீங்கள் தினமும் பார்க்கும் ஒரு சுவாரசியமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திடீரென உங்களைப் பற்றி செய்திவந்தால்? திடீரென்று உங்கள் முகம் திரையிடப்பட்டால்? ஆனால் என் உணர்வுகள் அதற்கும்மேல். அப்படி எனக்கு உற்சாகம்
தந்த அந்த விமர்சனப் பதிவை இங்கே பதிவிடுகிறேன்

***

மூன்றாம் நதி - முதல் விமர்சனம் ~ நிசப்தம்

5/27/2016 09:20:00 AM

வணக்கம்.
நான் அப்செரன் ஃபெர்ணாண்டோ. சென்னையிலிருந்து எழுதுகிறேன். அமேசான் நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்க மையத்தில் வேலையில் இருக்கிறேன். எனக்கு பார்வை இல்லை. சில மாதங்களுக்கு முன்பாக திருப்பதி மகேஷ் மூலமாக
நிசப்தம் அறிமுகமானது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரைக்கும் நிசப்தம் வாசிப்பதை வழக்கமாக்கிக்
கொண்டேன். அதன் வழியாக உங்களின் முதல் நாவலும் அதே சமயத்தில் மிகச் சிறந்த நாவலுமான மூன்றாம் நதியின் ஒலி வடிவத்தை அழகான வெகுமதியாகக்
கிடைக்கப்பெற்றிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். நாவலை எங்களுக்கு ஏற்ற வடிவில் வழங்கியதற்காக
மனப்பூர்வமான நன்றி. ஒலிவடிவமானது துல்லியமாகப் புரிந்து கொள்ளுகிற
வகையில் இருக்கிறது.
இத்தகையதொரு முன் முயற்சிக்காக நன்றி. இதை நீங்கள் தொடர வேண்டும்.
ஏனென்றால் உங்களுக்கும் உங்களுடைய எழுத்துக்களுக்காகவும் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று உறுதியாகச்
சொல்வேன்.

நாவல் பற்றியதொரு சிறு குறிப்பு :

மூன்றாம் நதி உண்மையிலேயே மனதைத் தொடுகிற நாவலாக இருக்கிறது. நாவல் எங்கு
எப்படித் தொடங்குகிறதோ அங்கு அப்படியே முடிவதை இந்த நாவலில் நான் விரும்பும் அற்புதமான
அம்சமென்று சொல்வேன். உங்களின் கதை சொல்லும் உத்தியானது நேரடியாகவும்
இலக்கியப் பூர்வமாகவும் ஏகப்பட்ட விவரங்களை நாவல் நெடுகவும் அவிழ்க்கிறது. நாவலின் வழியாக
பெங்களூரின் இன்னொரு முகத்தைப் பார்க்க முடிந்தது. தங்களின் அட்டகாசமான
வர்ணனையானது தொண்ணூறுகளின் பெங்களூரை முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
நவீனத்துக்கும் பழமைக்கும் இடையில் தள்ளாடுகிற தலைமுறையின் கச்சிதமான
உதாரணமாக பவானி இருக்கிறாள். பணத்துக்கும் நிலத்துக்குமான அடிமைத்தனத்தை
பால்காரர் காட்டுகிறார். தனது பழைய காதலைப் பற்றி கணவனிடம் சொல்லுமிடத்தில் ‘சும்மா வெளியே
கூட்டிட்டு போயிருக்கான். முத்தம் கொடுத்திருக்கான். அவ்வளவுதான்’ என்று
பவானி சொல்லுமிடத்தை ரசித்தேன். எதையெல்லாம் கலாச்சாரம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோமோ அதை
நாகரிகமும் வளர்ச்சியும் வெகு இயல்பாக மென்று துப்பிவிடுகிறது.
Totally மூன்றாம் நதி stream of tears!
நன்றி.
அன்புடன்,
அப்செரன் ஃபெர்ணாண்டோ .

***
அமேசான் கிண்டில்இல் மூன்றாம் நதி வாங்க

36 comments:

  1. ஒவ்வொரு பதிவிலும் ஒரு உயர்ந்த மனிதரை அரிமுகம் செய்கிறாய். இப்பதிவில் ஒரு நல்ல புத்தக அரிமுகமும் கூட. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. It's very interesting Anna அவ்வளவு முடியாமல் இருந்தப்ப கூட அந்த நாவலுக்கு நீங்க கொடுத்த விமர்சனம் ரொம்ப அருமை. இன்னும் இது போன்று பல பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு தங்கை rachel

    ReplyDelete
  3. அருமையான பதிவு
    புத்தகத்தை படிக்க தூண்டும் புத்தக விமர்சனம்
    இதே போல் தொடருங்கள்
    வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பா.. அழகிய பதிவு. உற்சாகமே சிறந்த மருந்து.வெற்றி பல தொடரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் நன்பரெ!

      Delete
  5. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வாழ்க வளமுடன்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி மதன், உங்கள் கருத்துக்கள் உட்சாகமூட்டுகிறது.

      Delete
  7. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. nice review my best wishes fernando. let me read that book soon.

    ReplyDelete
  9. ஃபெர்னாண்டோ உங்கள் விமர்சனம் அருமையாக இருக்கிறது.

    வாழ்த்துகள்

    துளசிதரன், கீதா

    மணிகண்டன் அவர்களை நேரில் சந்தித்தும் இருக்கிறேன். சென்னை வெள்ளம் வந்த போது க்ளீனிங்க் களப்பணியில்.
    நிசப்தம் வாசிப்பதுண்டு.

    வாழ்த்துகள் ஃபெர்னாண்டோ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Dear Sir, and Madam,
      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள். நிசப்தம் அனைவரும் வாசிக்கவேண்டிய வலைப்பூ.

      Delete
  10. பெர்னாண்டோ தங்களுக்கு பார்வையில்லை என்ற சங்கதியை இன்று தான் அறிந்தேன். சவாலை சமாளித்து வாழ்வில் வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் பயணியுங்கள்.

    அடியேனின் தாயார் பாரவையற்றவர்களுக்காகவே வாழ்வை அற்பத்தணித்தவர்கள் என்று கூறுவதில் சற்றே பெருமை கொள்கிறேன். தமக்கு தமிழகத்தில் பர்குரில் அமைந்துள்ள பார்வையற்றோர் பள்ளியை பற்றி தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். அந்த பள்ளியை ஆரம்பித்து தலைமை ஆசிரியையாக இருந்து வழி நடத்திய அந்த கொர்நேலியஸ் அம்மா தான் என்னை பெற்ற மகராசி.

    தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஐய்யா, மிக்க மகிழ்ச்சி. பர்கூர் பார்வையற்றோர் பள்ளி நன்றாகத் தெரியும். உங்கள் அன்னையை நினைக்கும்போது உவகையாக உள்ளது. தொடர்ந்து பயனிப்போம்.

      Delete
  11. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  மென்மேலும் எழுதி உயர வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிகள் ைய்யா.

      Delete
  12. தில்லையகம் வழியே வருகிறேன்.
    தங்களது எழுத்தின் நடை அழகாக செல்கிறது வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள். - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கலுக்கும் பாராட்டிர்க்கும் மனமார்ந்த நன்றிகள் சார். தொடர்ந்து பயணிப்போம்.

      Delete
  13. Thillaiakathu Chronicles வலைப்பூ மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டமையறிந்து மகிழ்கிறேன். எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சார். உங்கள் வாழ்த்து உட்சாகம் அளிக்கிறது. இரண்டுநாட்களுக்கு முன்புதான் எதேர்ச்சியாக உங்களின் "வாசகர்களை ஈர்க்கும் டேப்ளாய்ட்கள்" படித்தேன் எனக்கு மிகவும் புதிய தகவல். சிறப்பாக ிருந்தது.

      Delete
  14. தொடர்கிறேன்...

    சகோதரி கீதா அவர்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சார்.

      Special Thanks to Geetha Madam.

      Delete
  15. ஃ பெர்னாண்டோ,

    அருமையாய் விமர்சனம் செய்கின்றீர், உங்கள் எழுத்துக்கள் சிறப்பு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிகுந்த நன்றிகள் சார்.

      Delete
  16. மிகவும் அருமையாக உள்ளது.நூல்களை படிக்க தூண்டுகிற பதிவாக அமைந்துள்ளது.அதிலும் உங்கள் நாவல் பற்றிய குறிப்பு விமர்சனம் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.by.PR

    ReplyDelete
  17. மிகவும் அருமையாக உள்ளது.நூல்களை படிக்க தூண்டுகிற பதிவாக அமைந்துள்ளது.அதிலும் உங்கள் நாவல் பற்றிய குறிப்பு விமர்சனம் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.by.PR

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், படித்தமைக்கும் சிறந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் மாமா.

      Delete
  18. மிகவும் அருமையாக உள்ளது.நூல்களை படிக்க தூண்டுகிற பதிவாக அமைந்துள்ளது.அதிலும் உங்கள் நாவல் பற்றிய குறிப்பு விமர்சனம் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.by.PR

    ReplyDelete