Friday, June 05, 2020

லட்சுமி ரேகை




பொதுவா நம்மல்ல பலருக்கு ஒரு குழப்பமான அல்லது விவாதப்பொருளாக இருக்கிற ஒரு விஷயம் என்னன்னா, காலையில் எழுந்ததும் யார் / எது முகத்தில் விழிக்கிறது அப்படிங்கறது தான்
பலருக்கு பலவிதமான கருத்துக்கள் இருக்கு. ஒரு பழமொழி கூட காலையிலேயே நரி முகத்தில விழிச்சா நல்லது அப்படின்னு சொல்லுது.
ஒரு சிலர் காலையில் எழுந்ததும் நம்ம முகத்தை நம்மலே கண்ணாடியில் பார்த்துக் கொண்டால் அந்த நாள் நல்லா இருக்கும் அப்படின்னு சொல்றாங்க. வேறுசிலர் காலையில் எழுந்ததும் நம்முடைய வேதங்களைப் புரட்டி அதோட எழுத்துக்களைப் பார்த்தால் இன்னும் அந்த நாள் தெய்வீகமாக இருக்கும் அப்படின்னு சொல்றாங்க. பணம், நகைகள், இனிப்புவகைகள், தண்ணீர் மற்றும் இத்யாதிகள் இந்தப் பட்டியலில் உண்டு.
சிலர் ஒரு படி மேலே போய் நம்ம உள்ளங்கைகளை காலையிலேயே பார்த்தோம்னா அந்த நாள் தன்னம்பிக்கையோடும் தைரியமாகவும் இருக்கும் அப்படின்னு நம்பறாங்க.
அப்படித்தான் ஒரு நாளு ஒரு அண்ணன் தினமும் காலையில் என்னை உள்ளங்கையில விழிக்க சொன்னாரு. நானும் அவர் சொன்னதைக் கேட்டு ஒரு நாள் காலையில தூங்கி எழுந்ததும் என்னோட ரெண்டு உள்ளங்கைகளையும் நல்லா விரிச்சு வச்சி கண்ணு முன்னாடி வச்சு பாத்துக்கிட்டு இருந்தேன். அப்பாடா இந்த நாள் ரொம்ப சூப்பரா இருக்கும் அப்படின்னு நம்பிக்கிட்டு அந்த நாளைக் கடத்திக் கொண்டு இருந்தேன்.
ஆனால் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணுமே நடக்கல. என்னடா இது! அப்படின்னு நான் குழம்ப சரி பரவாயில்லை பிரச்சனை இல்லாமலாவது இருக்குதே அப்படின்னு நான் சமாதானப்படுத்திக் கொண்டேன்.
அன்னைக்கு சாயங்காலம் எங்கள் நண்பர்கள் ஒரு ரூம்ல உட்கார்ந்து படிச்சிட்டிருந்தாங்க. சும்மா அவங்கள வெறுப்பேத்தலாம்ன்னு அவங்க ரூம் கதவை தட்டித் தட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென தட்டிட்டு நாங்க ஆளுக்கு ஒரு பக்கமாக ஓட!
என்னை உள்ளங்கையில் விழிக்கச் சொன்ன அந்த அண்ணன் வலது பக்கமாகவும் நான் இடது பக்கமாகவும் ஓட அந்த அண்ணனோட கால் தடுக்கிய வேகத்தில் சோய்ங்கென என்னுடல் காற்றில் மேலெழும்பி, புவி ஈர்ப்பு விசையின் தவிர்க்க முடியாத அழைப்பினால் கீழே விழுந்து பூமாதேவியின் முகத்தோடு முகம் உரசியதில், மூக்கும் வாயும் உடைஞ்சு ரத்தம் வந்தது தான் மிச்சம்.
உள்ளங்கையில் கண் விழிச்சா நல்லது நடக்கிறதோ இல்லையோ ஆனால் ரத்தத்தை பார்த்தாச்சு. அப்படின்னு நான் நெனச்சுக்கிட்டு ஏன் இதையே ஒரு சுவாரசியமான பதிவா எழுத கூடாது? அப்படின்னு என் நண்பரோட ஆலோசனை செஞ்சுகிட்டு இருந்தேன்.
அப்ப அவங்க சொன்ன விஷயம் ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. சொல்லப் போனா இதை எழுதியே ஆகணும்ன்னு தூண்டுதலாகவும் இருந்துச்சி.
**********
காலையில் எழுந்ததும் இரண்டு உள்ளங்கைகளையும் நல்லா தேச்சு அந்த சூட்டை நம்ம கண்களுக்கு மேல கொஞ்ச நேரம் வைக்கணும், பிறகு இரண்டு கண்களையும் திறந்து அந்த கைகளை பாக்கும்போது அதுல ஓடுற லட்சுமி ரேகை நம்ம கண்ணுக்கு தெரியும் அப்படின்னும், அப்படி அந்த ரேகையை பார்த்துட்டா அந்த நாளில் எந்தவிதமான பணக் கஷ்டமும் வராது அப்படின்னும் ஒரு நம்பிக்கை இருக்குதாம்.
இது என்ன புதுசா இருக்கே! அப்படின்னு நான் யோசிக்க யோசிக்க என்னோட நண்பர் இன்னும் கொஞ்சம் தெளிவாக விளக்கினாங்க
உண்மை என்னன்னா காலைல நம்ம கைகளைப் பார்த்து இந்த இரண்டு கைகளும் நல்லா இருக்கறதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லணும். ஏன்னா இந்த ரெண்டு கையும் நல்லா இருந்தா நமக்கு வேற எவன் கையும் தேவை இல்லை அப்படி என்கிற நம்பிக்கை எப்பவுமே நம்ம கிட்ட இருக்கும்.
வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்!’ என்று கவிஞாயிறு தாராபாரதி குறிப்பிட்ட வாக்கியம் நிறைவேறனும் அப்படின்னா, நம்முடைய கைகளும் கால்களும் நல்லாயிருக்கணும். தினமும் நம்ம கைகளுக்கு கடவுள்கிட்ட நன்றி சொல்லும்விதமாக காலையில  நம்ம கைகளைப்  பாக்கணும். இந்த விஷயம் தெரியாம நான் வேற மாதிரி புரிஞ்சு ரத்தம் வந்தது தான் மிச்சம்.
என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு நாளைய விடியலில் யார் முகத்தில முழிக்கிறோம் என்பது விஷயமே இல்லை, அந்த நாளோட முடிவுல என்னென்ன வேலைகளை முடிச்சிருக்கோம்  அப்படிங்கறது தான் விஷயமே.
நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும்! நன்றி.


24 comments:

  1. அருமை அண்ணா
    தொடருங்கள்

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  3. Super bro. Thought provoking post. Keep rocking

    ReplyDelete
  4. மூட னம்புக்கைக்கு ெதுராக ுண்கல் பதிவு னந்ராக ிருந்தது, வாள்க்கையில் னீந்கல் னெரய ொடுவீன்கல் போல ொடுவது ுன்கல்கு ரோம்ப பிடிக்கும் போல ெலா பதிவுலையும் ோடுவது வருகிரது

    ReplyDelete
  5. Awesome Fernando keep posting :)

    ReplyDelete
  6. அருமை நண்பரே..

    எங்கே யார் முன் குளித்தோம் என்பதைவிட எங்கே என்ன காரியம் முடித்தோம் என்று இருந்தால் வாழ்க்கை வெற்றியே.

    அருமை..

    ReplyDelete
  7. எனக்கு  இந்த லட்சுமி ரேகை, கடவுள் நம்பிக்கையில் எல்லாம் நம்பிக்கை இல்லை.
    ஏனோ இந்த பதிவை வாசிச்சதும் சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் சந்திச்ச ஒரு பெண்தான் ஞாபகத்துக்கு வருகிறாள்.
    அவரது சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட்  எங்களிடம் இருக்கிறது.
    ரயில் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தவர்.
    அவருக்கு  இருக்கும் ஒரு கையை வைத்துக் கொண்டுதான் அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்.

    என்னை உள்ளங்கையில் விழிக்கச் சொன்ன அந்த அண்ணன் வலது பக்கமாகவும் நான் இடது பக்கமாகவும் ஓட அந்த அண்ணனோட கால் தடுக்கிய வேகத்தில் சோய்ங்கென என்னுடல் காற்றில்
    மேலெழும்பி, புவி ஈர்ப்பு விசையின் தவிர்க்க முடியாத அழைப்பினால் கீழே விழுந்து பூமாதேவியின் முகத்தோடு முகம் உரசியதில், மூக்கும் வாயும் உடைஞ்சு ரத்தம் வந்தது 
    தான் மிச்சம்///
    ரசிச்சென்.
    தொடர்ந்து எழுது ஃபெர்ணாண்டொ.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்தமைக்கு மிகுந்த நன்றிகள். என்னதான் கைகள் ிருந்தாலும் நம்பிக்கை............

      Delete
  8. நல்ல கருத்துள்ள பதிவு ஃபெர்னாண்டோ

    துளசிதரன்

    செம செம ஃபெர்னாண்டோ...ரொம்ப ரசித்தேன் கடைசியில் சொன்னவற்றை. யெஸ் அதே தான் நான் சொல்லுவது.

    எனக்கும் கை பார்க்கும் பழக்கம் சுத்தமாக இல்லை. ஆனால் நன்றி சொல்லும் பழக்கம் உண்டு. இன்று விழித்துவிட்டோம். இந்த நாள் இனியதாக அமையட்டும் என்று...முந்தைய நாளுக்கு நன்றி...

    கையை தேய்த்துக் கண்ணில் வைப்பது காலையில் எழுந்ததும் கண் விழிக்க கொஞ்சம் இதமாக்கிக் கொள்ளத்தான். மற்றபடி இல்லை.

    கடைசி வரிகள் அருமை ஃப்ரெனாண்டோ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார். மேடம், ரசித்துப் படித்தமைக்கும் அழகான விளக்கங்களுக்கும் நிறைய நன்றிகள்.

      Delete
  9. சிங்கத்தின் வேட்டை தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் தொடர்ந்து படியுங்கள்.

      Delete
  10. காலையில் எழுந்ததும் உங்களின் பதிவின் முகத்தில் தான் விழித்தேன் , கை கால்களை பற்றிய நல்ல தகவல் கிடைத்தது.

    ஆமாம் லட்சுமியின்(!!) ரேகை நம் கைகளில் எப்படி தெரியும்?

    அருமையான சிந்தனை.

    உங்கள் பெயரில் என்னோடு அரபு தேசத்தில் பணிபுரிந்த நண்பரை நினைவு படுத்தியமைக்கும் நன்றிகள்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. "ஆமாம் லட்சுமியின்(!!) ரேகை நம் கைகளில் எப்படி தெரியும்?"
      அது லட்சுமி கையில தெரியுமான்னெ தெரியலயே. நான் ுழைக்கும் நம் லட்சுமி தாய்களைச் சொன்னேன்.
      படித்தமைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் சார்.

      Delete
  11. ஓ உள்ளங்கையில் விழிப்பதற்கான உண்மை விளக்கம் இதுதானோ இப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன் சிறப்பு.மேலும் உங்களுடைய கடைசி கருத்து மிகவும் அருமை.யார் முகத்தில் விழிக்கின்றோம் என்பதைவிட அந்த நாளின் இறுதியில் உருப்படியாக என்ன வேலையை செய்து முடித்தோம் என்பதே மிக முக்கியம் .அருமை அருமை உங்களின் இந்த பதிவு சிரிக்கவும் வைத்தது சிந்திக்கவும் வைத்தது மிக்க உங்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகவேண்டும் நன்றி,ஏன் குறிப்பாக நன்றி சொல்கிறேன் என்றால் நீங்கள் இரத்தம் சிந்தி கற்றுக்கொண்டதை, நாங்கள் உங்களின் படைப்பின் மூலம் தெரிந்து கொண்டோம் அல்லவா அதனால்தான் நன்றி.காத்துகொண்டு இருக்கின்றோம் அடுத்த பதிவுகள் வரும்வரை.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள் ரசித்து, உணர்ந்து படித்தமைக்கு.

      Delete