Tuesday, May 26, 2020

அறிமுகப் பதிவு



எல்லோருக்கும் வணக்கம்.
நான் அப்சரன் ஃபெர்ணாண்டொ.
பிறந்தது மட்டும் விழுப்புரம் மாவட்டம். மத்தபடி வளர்ந்தது வாழ்றது எல்லாமே சென்னைதான். கொஞ்சநாள் கடலூர்.
அதனாலேயே என்னவோ சென்னைனா அவ்ளோ பிடிக்கும்.
படிச்சது ஆங்கில இலக்கியம், பற்று தமிழ்மேலதான்.
----------
எனக்குனு ஒரு ப்ளாக். நானும் எழுதப் போறேன்!
இந்த ரெண்டு விஷயமும் எனக்கே கொஞ்சம் வியப்பா இருக்கு!
எழுதணும்கிற என்னோட சின்ன ஆசைக்கு ஊக்குவிப்பு [Encouragement] என்கின்ற தீனியைப் போட்டு வளர்த்த என்னோட அன்பான, அக்கறையான மற்றும் முக்கியமான நட்புகள் / உறவுகள்.
அவங்கள பத்தி விரிவா எழுத விரும்பறதால, பெயர்கள குறிப்பிட முடியல. ஆனா இந்தநேரத்துல என் மனசுமுழுக்க நெறைஞ்சிருக்குற அவங்க எல்லோரையும் அன்போடையும் நன்றியோடையும் நெனச்சுக்கிறேன்.
ஆனா சொல்லியே ஆகவேண்டிய ரெண்டு ஆளுமைகள் இருக்காங்க.
இந்த ரெண்டுபேருமே என்னோட வாசிப்புத் திறன் / அனுபவம் மேம்பட மிகமுக்கிய காரணிகள்.
மகேஷ் & ரவிக்குமார் சார்.
2016-ல் பொக்கிஷமா கெடச்சாங்க இந்த ரெண்டுபேரும்.
மகேஷ்: பல புதுப்புது பதிவர்கள் எழுத்தாளர்கள்னு அறிமுகப் படுத்தி, சில புது நூல்களையும் தந்து வாசிக்கவச்சதோடு மட்டுமில்லாம, எனக்குள்ள கொஞ்சமா துளிர்த்திருந்த எழுத்துத் திறமையை வெளியே கொண்டுவந்து, எப்பவும் என்னை எழுத சொல்லிக்கிட்டே / தூண்டிக்கிட்டே இருப்பாரு.
அவரும் சொல்லிச் சொல்லி பாத்து நான் கேட்கலனு புரிஞ்சி, சும்மா பேச்சுவாக்குல ப்ளாகுக்கு என்ன பேரு வைக்கலாம், என்ன தலைப்பு கொடுக்கலாம் அப்படீனு கேட்டு, அவரே ப்ளாகையும் கிரியேட் (Create) பண்ணி கையில கொடுத்து இனிமே ஒழுங்கு மரியாதயா எழுதுன்னு சொல்லிட்டாரு.
புனைப்பெயர்ல எழுதவானு நான் கேட்க, சொந்த பெயர்லேயே எழுதச் சொல்லி அறிவுரைத் தந்தாரு.
சிவாஜி The Boss படத்துல ரஜினி சொல்லுவாரே "ஆதி என் கை ரொம்ப ராசியான கை" அந்தமாதிரி நண்பர் மகேஷோட கையும் இப்பொ வெற்றிகரமா எழுதிகிட்டிருக்க பலருக்கு ப்ளாக் ஆரம்பிச்சுத் தந்த ராசியான கை.
ரவிக்குமார் சார்:  இவர பத்தி சொல்லணும்னா ஏற்கனவே இவரு பொக்கிஷம் அப்படின்னு சொல்லிருந்தேன். அத்தோட அவரு நடத்திக்கிட்டு இருக்க வாசிப்போம் இணைய நூலகம் எனக்கெல்லாம் கெடச்ச மிகப் பெரிய புதையல்.
என்னைப் போன்ற பார்வையற்றவர்கள் தடையில்லாம படிக்கணும்ங்கிறதுக்காக ஒரு ப்ளாகாக ஆரம்பிச்சி, அதயே ஒரு அழகான இணையதளம் அளவிற்கு மாத்தி,  சிறப்பான தரமான நூல்களோட ஒரு பக்கா நூலகத்த நடத்திக்கிட்டு இருக்காரு.
உள்ளூர் எழுத்தாளர்கள் முதல் உலக எழுத்தாளர்கள் வரை, பழமை இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை தினம் தினம் புதுப் புது நூலறிமுகங்கள்,  நூல்விமர்சனங்கள். பல நூல்களைப் பற்றின சுவாரஸ்யமான தகவல்களத் தந்து எங்களப் படிக்கத் தூண்டிக்கிட்டே இருப்பாரு.
தன்னால் முடிந்தவரை புத்தகங்களை நாங்களும் படிக்க கூடியவகையில் accessible formatல் கொண்டுவரும் உன்னத முயற்சி & உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தன்னலமற்ற தனித்துவ மனிதர்.
இதோ! இதை நான் எழுதி கொண்டிருக்கும் இந்தநேரத்தில், இதை நீங்கள் படித்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் நிச்சயமாக ஏதாவது ஒரு நூலை நாங்கள் படிக்கக் கூடியவகையில் மின்புத்தகமாக (E-book)  உருவாக்கிக் கொண்டிருப்பார்.
வரும்காலங்களில் இன்னும் விரிவாகப் பேசுவோம்.
மேற்கூறிய அம்சங்கள் என்னை ஒரு நல்ல வாசகனாக வளர்த்துக் கொண்டிருக்க,
நல்ல நல்ல வாசகர்கள், நண்பர்கள், ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்களாகிய உங்கள் ஆதரவுடன் எழுத்துலகில் அடியெடுத்து வைக்கிறேன்.
உங்கல் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் மிக மிக முக்கியம் & அவசியம்.
**********
இன்று பிறந்தநாள் காணும் என் செல்லத் தங்கைக்கு சமர்ப்பனம்.

26 comments:

  1. வாழ்த்துக்கள். தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Happy b'day to your sis . Mahesh unnayum vittu vekkalaya .

    ReplyDelete
    Replies
    1. wishes conveyed to her. மஹெஷ், அது ெப்படி விடுவாரு.

      Delete
  3. Welcome Fernando, good language and coherence. You are rocking dear.

    ReplyDelete
  4. Replies
    1. ரொம்ப நன்ரி மைநா. தொடர்ந்து ுங்கள் ூக்கம் தேவை.

      Delete
  5. மிகவும் அருமையாக உள்ளது

    ReplyDelete
  6. மிகவும் அருமையாக உள்ளது. உங்களது படைப்புகளை பார்க்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  7. வாத்துக்கல்

    ReplyDelete
  8. வாழ்துக்கல் apseran fernando ுன்கல் பயனம் வெத்ரீ ாகத்தும்

    ReplyDelete
  9. Super my dear Rockstar! Happy birthday to your sister! உண்மையாகவே உங்களோட இந்தப் படைப்பு ரொம்ப அழகா இருக்கு அண்ணா. இன்னும் உங்களுடைய படைப்புகள் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு தங்கை

    ReplyDelete
    Replies
    1. Dear sister Rachel, thank you so much for your precious comments and wishes. keep support and remember in your Prayers!

      Delete
  10. ஃபெர்ணாண்டொ,
    சொந்த  ப்ளாகில் எழுத  ஆரம்பிச்சிருக்கும் உனக்கு முதலில் வாழ்த்துக்கள்.
      இது வரைக்கும் நான்  வாசித்த உனது ஒன்னு ரெண்டு புத்தக விமர்சனங்களில்
    உன்னிடம் நல்ல எழுத்துத் திறமை இருப்பதை என்னால் உணர முடிந்தது.
    நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதவும்.
    ரவிக்குமார் சாருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
    தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    2016 துவக்கத்தில் நம் இரண்டு பேரையும் அறிமுகம் செய்து வைத்த
    பரத்துக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. Sure Thank you so much for your encouragements and appreciations. definitely special thanks to Bharath. your wishes conveyed to Ravikumar sir.

      Delete
  11. ஃபெர்னாண்டஸ் வாழ்த்துகள் முதலில் ப்ளாக் தொடங்கியமைக்கு. எங்கள் தளத்தோடு இணைத்துக் கொள்கிறோம் உங்கள் ப்ளாகையும்.

    உங்கள் இனிய தங்கைக்கும் எங்களது பிலேட்டட் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    துளசிதரன், கீதா

    மகேஷ், அரவிந்த் எங்கள் இனிய நண்பர்கள்.இப்போது அவர்கள் மூலம் நீங்கள் மற்றும் நவீன் வலை வழி அறிமுகம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Dear Sir, and Madam,
      Very Happy to see your Comments.
      Thank you for your generosity for add my blog in your Precious site.
      Mahesh introduced your book. Decided to write a review, but due to some technical difficulties am unable to do it.
      But you accept me without any second thought.
      மேன்மக்கள் மேன்மக்களே!
      Need your continuers support and guidance.
      Your Precious wishes conveyed to my sister.
      Thank you.

      Delete
  12. அண்ணனே இனிதாக தொடரட்டும் பயணம்!

    ReplyDelete
  13. அன்பின் ஃபெர்ணாண்டோ....

    உங்களது வலைப்பூ கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

    நண்பர் மகேஷ், அரவிந்த், அபிநயா மற்றும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    நல்லதொரு அறிமுகப் பதிவு. இனி தொடர்ந்து வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சார்ந்த நன்றிகள் சார், உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.

      Delete