Wednesday, August 31, 2022

உண்டு, வளர்த்தான்!

ஹாய் எல்லாருக்கும் வணக்கம், எப்படி இருக்கீங்க? 

திடீர்னு என்னுடைய நண்பருக்கு யானைகள் பற்றி நல்ல ஒரு ஆர்வம் ஏற்பட, சின்ன சின்னதா தேடி கொஞ்சம் கொஞ்சமாக சில விஷயங்களை சேகரிச்சு ஒரு ஆர்ட்டிகளை எழுதி தம்பி நீ தான் பிளாக்ல ஏதும் எழுதறது இல்ல, இதையாவது ரிலீஸ் பண்ணு அப்படின்னு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு குடுத்தாங்க. 

வாங்கி வச்சிட்டு ஐயோ......... அப்படின்னு மறந்துட்டேன் இன்னிக்கி அத ரிலீஸ் பண்ணலாம் கொஞ்சம் பொருத்தமா இருக்குமே அப்படிங்கறதால நாம அதை இன்னிக்கு வெளியிடிகிறோம்.  

கீழ அவங்க எழுதுன கட்டுரையை அப்படியே அவங்க வார்த்தைகளில் கொடுத்து இருக்கேன் படிச்சி பாத்துட்டு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

******** 

பிரம்மாண்டமான உயிரினம் யானைகள்! என்பதில் ஐயம் ஏதும் இல்லை.  

ஆசியாவின் துணைக் கண்டத்தில் அமைந்துள்ள இந்தியாவில் வாழும் யானைகள் பற்றி இந்த சிறிய தகவல் பெட்டகத்தின் மூலம் அறிந்து கொள்வோமா?

மனிதர்களாகிய நாம் உண்ணும் உணவானது நம் உடல் வளர்த்து உயிர் காக்க உதவுகிறது. 

ஆனால் நம்மை எப்பொழுதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும் அதிசய குழந்தைகலாம் யானைகள், தாங்கள் உண்ணும் உணவின் மூலம் உடல் வளர்ப்பதுடன் காடு வளர்க்கவும் உதவி செய்கின்றன. 

அது உண்ணும் உணவில் 40 விழுக்காடு அதன் தேக வளர்ச்சிக்கும், 60 விழுக்காடு உணவை அப்படியே வெளியேற்றுவதால் அவை காட்டின் வளர்ச்சிக்கும் வித்திடுகின்றன.  

சங்க காலத்தில் வேழம், கரி மற்றும்  ஆன என்றும் சமீப காலத்தில் யானை, ஆண்டவர், ராஜா, பெரியவர் மற்றும் விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றன.  தற்பொழுது நம் நாட்டில் 50க்கும் மேற்ப்பட்ட பெயர்களால் யானைகள் குறிப்பிடப்படுகின்றன. 

யானைகள் பெரும்பாலும் ஓரிடத்தில் தங்கி வாழ முற்ப்படுவதில்லை. 

அதிலும் அவை தாவர உன்னிகளாக வாழ்ந்தாலும் இறந்த பின்னர் தன் உடலை பிற ஊன் உன்னிகளுக்கு உணவாக தருகின்றன.  

ஒரு நாளைக்கு சுமார் 250 கிகி முதல் 350 கிகி வரை உணவு எடுத்துக் கொள்கின்றன. அவைகள் 16 மணி நேரம் உண்பதற்க்காக  செலவிடுகின்றன. அதே  போலவே நாளொன்றுக்கு சுமார் 240 லிட்டர் நீர் அருந்துகின்றது. மாதங்கத்தின்  பற்கள் சராசரியாக 5 கிலோ வரை எடை கொண்டுள்ளன.  மனிதர்களுக்கு  கடவாய் பற்களை போல ஆணைகளுக்கு தந்தங்கள் செயல்படுகின்றன. ஆசியாவில் ஆண் கலிருகளுக்கு மட்டும் தந்தங்கள் நீண்டு வளறுகின்றன. நீண்ட தந்தங்களை கொண்ட ஆண் கலிருகள் வாரணம் என்ற சிறப்பு பெயராலும் குறிப்பிடப்படுகின்றது.  பெண் பிடிகளுக்கு தந்தங்கள் குறுகிய அளவில் காணப்படும். 

கைமாக்கள்  தங்கள் நீள் துதிக்கையை கொண்டு தான் பன்முக பணிகளை செய்கின்றன. ஒரே நேரத்தில் சுமார் 4 லிட்டர் நீரிணை உறிஞ்சி கொள்ளும் திறன் பெற்றவையாக துதிக்கைகள் இருக்கின்றது. 

 பொதுவாக கலபங்கள்   நாளொன்றுக்கு ஐந்து மணி நேரம் நடை பயணம் மேற்கொள்கின்றன.   அவை தங்கள் உணவை தேடி வெவ்வேறு வழி தடங்களில் பயணிக்கின்றன.  

மனித மூளையை விட யானையின் மூளை நான்கு மடங்கு  பெரியது. 

சுமார் ஐந்து கிலோ எடையை கொண்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  அதனால் எதையும் விரைவில் புரிந்து கொள்ளும் திறனையும், தெரிந்து கொண்டதை நினைவடுக்குகளில் பதிந்து வைக்கும் திறனையும், அவ்வாறு சேகரித்ததை அடுத்த சந்ததிகளுக்கு கற்பிக்கும் திறனையும் தன்னகத்தே  

கொண்டுள்ளது. 

அடர் காணகத்தில் நீர் நிலைகளை கண்டறிவது சற்று கடினமான பணி என்ற போதிலும், யானைகள் நுகரும் திறனை கொண்டு சுமார் 5 கிலோ மீட்டருக்கு முன்பே நீர் நிலைகளை உணர்ந்து விரைவில் சென்றடைகின்றன. திமின்கலத்தின் உடல் கூறுகளை ஒத்து யானைகளின் உடல் கூறுகள் காணப்படுகின்றது. அதனால் தானோ என்னவோ யானைகளுக்கு நீர் விளையாட்டு  மிகவும் பிடிக்கின்றது.   இயற்க்கையாகவே நீச்சல் அடிக்கும் திறன் இருப்பதால் 30 கிலோ மீட்டர் பரப்பளவில் நீந்துகின்றது.  

யானைகளின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 27 முறை துடிக்கிறது. 

மேலும் அவை சிறிய கண்களை கொண்டிருப்பதால் சற்று மங்கலான பார்வை திறனை கொண்டிருக்கும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். எனவே கரிகள் பெரும்பாலும் தனது நுகரும் திறனையும், கேட்கும் திறனையும் தான் அதிகமாக நம்புகின்றன. மனிதரின் குரலை கேட்டு அது ஆனா, பெண்ணா மற்றும் இழம்  வயதா, முதிர்ந்த வயத போன்றவற்றை கண்டறிகின்றன, என்ற தகவல் சமீப கால ஆய்வின் மூலம் வெளி வந்துள்ளது. 

யானைகளுக்கு நக கண்களில் மட்டும் தான் வேர்வை சுரப்பதால் அதன் உடல் வெப்பத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.  அதனால்   தன் காதுகளை அசைப்பதும், மண்ணை அள்ளி உடல் முழுவதும் போட்டுக் கொள்வதும் கோடை காலத்தில் துதிக்கை வாயிலாக எச்சில் கொண்டு வயிறு முழுவதும் ஈரப்படுத்திக் கொண்டும் சமன்செய்ய முயற்ச்சிக்கின்றது.  ஏனென்றால் ஆணைகளின் உடம்பில் காணப்படும் பெருமளவிலான உதிறக் குழாய்கள் பெருங்காதுகளுடன் தான் இணைந்துள்ளது. வேறு கண்டங்களை   ஒப்பிடும்போது, இந்தியாவில் உள்ளவை அளவில் சிறியது.  ஆனால் உடம்பில் சுருக்கங்கள் ஏதும் காணப்படுவதில்லை.  அதனின் தோல் மூன்று சென்டி மீட்டர் தடிமனாக இருப்பினும்  அதிக கூச்ச உணர்வை தோற்றுவிக்கின்றது.  

யானைகளின் துதிக்கை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட தசைகளால் ஆனது. எலும்புகலற்ற  துதிக்கையினை கொண்டுள்ளதால் சுமார் 400 கிலோ எடையுள்ள பொருட்களையும் தூக்கிச் செல்கின்றன. 

துதிக்கையின் நுனி பகுதியில் ஒரு  சிறு விரலை  கொண்டுள்ளதாள் அதன் உதவியோடு  குண்டூசியினையும் லாவகமாக எடுக்கின்றது.  மழை காலத்தில் சேற்றில் நன்கு புறளுகின்றது.   இதன் மூலம் சிறு பூச்சிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்கின்றது. யானைகள்  60 வார்த்தைகளை புரிந்து கொண்டு செயலாற்றுகின்றது. 

மனிதர்களை போலவே யானைகளும் 70 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றது. 

நூற்றுக்கும் மேற்ப்பட்ட யானைகள் தொடர்புடைய பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன. யானைகளின் கால்கள் தூண்கலை போல உறுதி மிக்க எலும்புகளால் அமைந்திருக்கின்றன. அவை செங்குத்தாக அமைந்திருப்பதால் யானைகளால் அதுசார்ந்த நிலவியல் அமைப்பிற்கேற்ப செயல்பட முடிகின்றன. 

இயல்பிலேயே வேகமாக நடக்க கூடியவை என்றாலும் மேடான பகுதிகளில் யேறும்பொழுது மட்டும் சிறிது வேகம் மட்டுப்படுகின்றது. 

ஆனால் சரிவுகளில் அவற்றிற்கு நடப்பதை காட்டிலும் பின்னங்காலை மடக்கி முன்னங்காலை நீட்டி சறுக்கி செல்வது எளிதாநது.  என்ற போதிலும் சரிவுகள் மற்றும் பல்லங்களை கண்டு பயம் கொள்கின்றது.    

கடகம் என்ற சொர்ப்பதத்திற்கு யானை கூட்டம் என்பது பொருள். 

யானைகள் பெரும்பாலும் கூட்டம் கூட்டமாக தான் வாழ்கின்றன. என்றாலும் ஒரு சில காரணங்களால் சில யானைகள் தங்கள் கூட்டத்தை விடுத்து பிரிந்து சென்று தனித்து வாழவும் முற்படுகின்றது. 

அதிலும் குறிப்பாக பருவம் எய்திய ஆண் யானைகள் வேறு கடகத்தை  சேர்ந்த பெண் இணையை தேடி அலைகின்றன. 

யானைகளிடம் துள்ளி குதிக்கும் பழக்கம் காணப்படவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். உலகிலேயே தன் உணர்வுப் பன்பு, கண்டறியும் திறன் கொண்ட உயிரினங்கள் வெகு சில. அந்த வரிசை பட்டியலில் யானையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

12 வயது முடிந்த பெண் யானைதான் கற்பம் தரிக்கும்  தகுதியை பெறுகின்றது.  இணை சேரும் பருவத்தில் தான் ஆண் யானையின் விழிக்கும் செவிக்கும் இடையே அமைந்துள்ள சிறு துளையில் மத நீர் வெளிப்படுகின்றது.  அதையடுத்து  அதிக பணி பொழிவின்    போதும், வெப்பம் மிகுதியாகும் பொழுதும் மதம் பிடிக்கின்றது.  

யானைகள் பாலூட்டி இனத்தை சேர்ந்த உயிரினமாகும். இவற்றின் கற்ப காலம் சுமார் 18 மாதங்கள் முதல் 22 மாதங்கள் வரை நீடிக்கின்றது. அதன் கற்ப காலத்தில் கூட்டத்தை சேர்ந்த மற்ற யானைகளால் காவல் காக்கப்படுகின்றது. 

கூட்டத்தை வழி நடத்தும் பொறுப்பை வயது முதிர்ந்த பெண் யானைகளே கை கொள்கின்றன. ஆண் யானைகள் கூட்டத்தை காவல் காக்கின்றன. 

பருவம் வந்த ஆண் யானை தன் துணையை தேடி வேறு கூட்டத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றன. பாலூட்டும் காலத்தில் யேதாவது காரணத்தினால் தாய் யானையினால்  பாலூட்ட தடை ஏர்ப்படுமேயானால் தங்கள் கூட்டத்தை சேர்ந்த வேறொரு தாய் யானை, அக்குட்டி யானைக்கும்   பாலூட்டி விடுகின்றது.  தாய் யானைகள் ஐந்து வருடங்கள் வரை தங்கள் குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கின்றன.  

ஆசிய காட்டு  யானைகள் பெரும்பாலும் நின்று கொண்டே தூங்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றன. 

வேலங்கள் யேதேனும் சிறு ஆபத்தை உணர்ந்துவிட்டாலும் கூட, இரண்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் பரப்பளவில் மேய்ந்து கொண்டிருந்தாலும்  தங்களிடையே மெல்லிய ஓசையினை ஏர்ப்படுத்துவதன் மூலம் எச்சரிக்கின்றன. 

அதே சமயம் பேராபத்தை உணர்ந்துவிட்டாலோ, ஒன்றன் பின் ஒன்றாக மொத்த கூட்டமும் பிலிருகின்றன.  இச்செயளிநாள் காட்டில் வாழும் அனைத்து உயிரினங்களும் எச்சரிக்கப்படுகின்றன. 

கடுத்த நீர் அருந்தும் ஆணைகளுக்கு எளிதில் தாகம் ஏற்ப்படுவதில்லை என்ற போதிலும் 24 மணி நேரத்தில் ராஜாக்களுக்கு ஒரு துளி நீர் கூட கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அருந்தவில்லை என்றாலோ அவை மரணித்து விடும் அபாயமும் தென்படுகின்றது. 

பொதுவாக கஜ ராஜாக்கள் எந்த விலங்கை கண்டும் அஞ்சுவதில்லை ஆனால் அது தேனிக்களிடம் மட்டும் விதி விளக்கு.  சங்க காலம் தொட்டே வேலங்களுடனான மனிதர்களின் உறவு அலாதியானது!   

கலிருகள் மிகுந்த பலசாலிகளாக இருந்தாலும் அதிக அன்பும் இறக்க உணர்வும் கொண்டவை.  எளிதில் ஏமாற கூடியவை. ஆதலால் மனிதர்கள் அவற்றை பிடித்து போர்க்கலைகளை பயிற்றுவித்துள்ளனர்.  பல்வேறு கலைகளில் நன்கு தேர்ச்சிப் பேற்ற ஆணைகள் வேந்தர்களுக்கான பட்டத்து யானைகளாகவும் வலம் வந்துள்ளன. யானை படை கொண்டு சேனை பல வென்ற மன்னர்கள் தரணி புகழ் பெற்றுள்ளனர். ஆகையினால் படையை பராமரிக்க அதிக எண்ணிக்கை கொண்ட நபர்கள் தேவைப்பட்டதால் அனேகம்பேர் அரசாங்க பணியிலும்  நீயமிக்கப்பட்டுள்ளனர். 

விருப்பம் கொண்ட சிலர் தங்கள் வீட்டில் தனிபட்ட முறையிலும் வளர்த்துள்ளனர்.  1960களில் இயற்றப்பட்ட நில  சீர்திருத்த சட்டங்களுக்கு பிறகுதான் யானைகள் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டன. கம்பீரமான தோற்றம், வேர்வை சுரக்காத தேகம், நாளொன்றுக்கு இரண்டு முறை நீராடும் திருமேனி, துருநாற்றமின்றி வெளியேற்றப்படும் கழிவுகள் ஆகிய சில அடிப்படை  காரணிகளால் நல்ல சிறப்பை பெற்றுள்ளன யானைகள்.     

கரிய நிறம் கொண்ட பெருமாக்கள் அதிக அளவு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் அதிக பரப்பளவு கொண்ட உயிர் வாழிடங்கள் தேவைப்படுகின்றன.   அத்தகைய வாழ்விடங்கள் சுருங்கி வருவதால் யானைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன. போதுமான உணவு கிடைக்காத போது பட்டா நிலங்களுக்குள்ளும் அல்லது ஊருக்குள்ளும் அத்துமீறி நுழைந்து விடுகின்றன. அவற்றுள் சில அட்டகாசம் செய்கின்றன.  அத்தகைய தருணத்தில் தான் இருபாலருக்கும் நன்மை ஏற்படும் வகையில் அரசாங்கம் தலையிட்டு அதனை பிடித்து கும்க்கி யானையாக மாற்றும் பயிற்சி அளிக்கின்றது. 

மாரடைப்பு, இதய கோளாறு, மூளைப் பகுதியில் ஏற்படும் கட்டி, அதிகமாக உட்கொள்ளும் உணவின் காரணமாக தோன்றும் குடல் புழுக்கள்,  சரியான அளவில் நீர் பருகாமையால் தோன்றும் குடல் சுருங்கி நோய் மற்றும் துதிக்கை துண்டிக்கப்படுதல் போன்ற காரணங்களாலும் சிறு வயதிலேயே  ஏற்படும் வைரஸ் தொற்றுக்கலாலும் மரணம் நிகழ்கின்றன. அது மட்டுமின்றி மின்சார வேலிகள், தொடர் வண்டி சாலைகள், தந்தங்களுக்காக வேட்டையாடுதல் போன்ற வேறு சில காரணங்களாலும் மரணிக்கின்றன. யானைகளை நன்கு பராமரிப்பதிலும் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெற செய்வதிலும் தாய்லாந்து அரசாங்கம் முன்னோடியாகத திகழ்கின்றது. அதை போல நாமும் நம் தாய் திரு நாட்டில் சில கவளங்கள் உணவு மற்றும் நீரை வேண்டி நாள் தோறும் அவை நடத்தும் யாகத்திற்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோமா!

--------

மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

என்றென்றும் அன்புடன் உங்கள் நண்பன்.