Sunday, April 14, 2024

வேம்பரசி!

வணக்கம் அன்பு சொந்தங்களே,

உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பிறந்திருக்கும் இந்த புத்தாண்டு உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பமும் அன்பையும் அள்ளிக் கொடுக்கட்டும்.

இந்த நல்ல நாளில் ஒரு முக்கியமான பதிவோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

ஒருகாலத்துல வீட்டுக்கொரு வேப்பமரம் இருந்துச்சு, அப்புறம் தெருவுக்கு ஒன்னாகி இப்போ ஊருக்கு ஒன்னு பாக்குறதே கஷ்ட்டமா இறுக்கு.

என் நண்பரோட பெசிக்கிட்டிருந்தப்போ அவங்க சொன்னது வேப்பமரம் நமக்கு வேண்டாமலே கெடச்ச வரம்

கேக்கும்போதே ரொம்ப அழகா இருந்ததோடு மட்டுமில்லாம கொஞ்சம் யோசிக்க வச்சது.

அப்படி என்னங்க இருக்கு வேப்பமரத்துல? கொஞ்சம் விரிவா சொல்லுங்கன்னு கேட்டதுக்கு அவங்க செதிக்கி கொடுத்த பதிவ கீழ கொடுக்குறேன் கொஞ்சம் வாசிச்சி பாருங்களேன்.

********

நம்மிடையே உலாவரும் முதுமொழிகள் பற்பல.

அவற்றுள் ஆளும் வேலும் பல்லுக்குறுதி, நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி, வேம்பு இருந்தால்  பாம்பு வராது  போன்றவை சில.

வெப்பமண்டல காடுகளில் நாம்  வசிப்பதாலோ என்னவோ நம்மவர்கள் நீர் மேலான்மயில் சிறந்து விளங்கியதோடு பிறர்க்கும் கற்று தர முன் வந்திருக்கின்றனர்.

நம் பரம்பரை வாழ்வியல் முறையில்  மூலிகை மருத்துவமும்   ஒன்று.

அம்மறுத்துவத்தில் நம் குழ மூதாயாக இன்றளவும் போற்றபடுவது  வேம்பு என்றால் அது மிகையல்ல.

கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு அதிலும் [துலுக்க வேம்பு] மற்றும் சர்க்கரை வேம்பு என்று சில வகைகள் உண்டு.

கருவேம்பு வகை வேப்ப மரங்கள்தான் பெரும்பான்மையான இடங்களில் காணப்படுகின்றன.

அனைத்து வகையான நிலப்பரப்பிலும் வளறக்கூடியது ஆயினும் கரிசல் மண் ஏற்றதாக கருதப்படுகிறது.

கடும் வரட்சியிலும் உயிர் வாழக்கூடியது. எவ்வாறெனில், காற்றிலுள்ள ஈரப்பதத்தைக்கூட  உருஞ்சும் திறன் கொண்டது.

அதிகபட்சம் 50 டிகிரி செல்ஷியஸ்  வெப்பநிலையிலோ அல்லது அதற்கு மேல் அதிகரித்தாலோ அதையும் தாங்கி கொள்ளும் திறன் கொண்டது.

வேம்பரசி என்ற பெயருக்கேற்றபடி மனிதர்களுக்கு மட்டுமின்றி இயற்கைக்கும் தேவையான மருத்துவ குணங்கள் யேராலம் கொட்டிக்கிடக்கின்றன.

வேம்பானது காற்று சுத்திகரிப்பானாகவும் இயற்கை பூச்சிக்கொல்லியாகவும்   மிகப்பெரிய பங்காற்றுகின்றது.

வேம்பின் அங்கங்கள் யாவும் பசுந்தங்கத்திற்கு ஈடானது என்பது பின்வரும் குறிப்புகள் மூலம் நீங்களே கண்டு கொள்வீர்கள்.  

வேப்பம்பூ வெள்ளை நிறத்தில் கொள்ளை அழகுதான் இல்லையா

இந்த பூவிலிருந்து கிடைக்கப்பெறும் தேன் சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகிறது. 

பூத்து குலுங்கும் பூவு, அதை பார்த்ததும் ஓடிவிடும் நோவு என்பதற்கேற்ப 10 வயதிற்கு உட்பட்ட  சிறுவர்கள் உட்கொண்டால் உடல் உபாதைக்கு உதவி செய்யும் குட்டி கிருமிகள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும் என்பதில் அய்யம் இல்லை.  

வேப்பிலை என்றாலே வெப்பத்தை வெள்ள உதவும்  குளுமையும்   அதன் நிழலும் தான் நமக்கு முதலில் நினைவில் வரும்.

வேப்பிலை கரைசல் ஒரு சிறந்த பூச்சிக்கொல்லி  மருந்து என்பது நாம் அனைவரும் அறிந்த  ஒன்று.

அனைவரும் கூடும் பொது இடங்களில் உள்ள நுண்ணிய கிருமிகளை அகற்ற மஞ்சள் கலந்த நீருடன் கூடிய வேப்பிலை உதவுகிறது.

உடம்பில் தோன்றும் சில கட்டிகள், அம்மை கட்டு  மற்றும் அம்மை போன்ற சிலவகை பிணிகளை  விரட்டுவதோடுமுகப்பருக்களை நீக்கும் அழகு சாதனமாகவும் பயன்படுகிறது.

அது மட்டுமல்ல இலையுதிர் காலத்தில் கிட்டத்தட்ட  மரத்தின் மொத்த இலைகளும் உதிர்ந்து  நில பரப்பின் மீது மூடாக்கு போல அழகாக காட்சியளிக்கும்.

அந்த பசும் போர்வை மன்னோடு மண்ணாக உறவாடி மக்கிய உரமாகவும் செயல்படுகின்றன. 

வேப்பங்குச்சி, வேப்பம்பட்டை மற்றும் வேர் அனைத்துமே மூலிகை உலகில் பெரும்பங்காற்றுகின்றன.

வேப்பங்குச்சி கொண்டு பல்  தூளக்கும்போது துருநாற்றம் வீசும் பிரச்சனை கூட சரியாகி விடுவதாக மருத்துவ குறிப்புகள் அறிவிக்கின்றன.

இவ்வாறாக அலப்பரிய நன்மைகளை தன்னுள்ளே கொண்ட அற்புத மரத்தை எவ்வாறு உருவாக்கி வளர்த்துஅதன் எண்ணிக்கையைய்யும் அதிகப்படுத்துவது என்ற சில குறிப்புகலை  இங்கே காண்போமா

 

நிலத்தை தேர்ந்தெடுக்கின்ற பொழுது தண்ணீர் தேங்காத இடமாக இருந்தால் கூடுதல் சிறப்பு. 

பதியம்போடுவது மட்டுமின்றி விதை பந்து மூலமாகவும் நடவு செய்து வளர்க்கலாம். 

குறித்த காலத்தில் தான் நட வேண்டும் என்பதில்லைஆனால் மழை காலத்தில் நடும்பொழுது அங்கே வளரும் சூழல் எளிதாக உருவாகிறது. 

பதியம்போட்ட மறக்கன்றுகளுக்கு சுமார் ஆறு மாதங்கள் வரை நமது உதவி தேவைப்படுகின்றது.

அதே சமயம் விதை பந்துகள் மூலம் மழை காலத்தில் நடப்படும் கன்றுகள்ஆறிலிருந்து எட்டு நாட்களுக்குள்ளாக முளைக்க ஆரம்பிக்கின்றன. 

நான்குஐந்து ஆண்டுகளிலேயே வளர்ந்து, பூத்து, காய்த்து கனிய துவங்குகின்றன. 

ஒரு வயது முடிந்த நிலையில்அதன் சிம்பு அதாவது குட்டி கிளைகளை கலைந்து விட்டால் வானத்தை  நோக்கி நேராக வளரும் என்கின்றனர் அனுபவசாலிகள். 

அதே சமயம் மரத்தின் நுனி பகுதியில் கொழுந்து இருக்கும் கொத்துக்களை பறித்து அகற்றி விட்டால் இரண்டு மூன்று மீட்டர் சுற்றளவு பெருக்கும் என்பார்கள். 

ஒரு ஏக்கருக்கு சுமார் 300 மரங்கள் வரை நடவு செய்து, வேம்பு பண்ணை உருவாக்கலாம். அதனூடே ஊடுபயிர்கலான [நிழல் பயிர்கள்] தக்காளி, மிளகு, கொத்தமல்லி [தனியா] மற்றும் சில வகையான பூக்களையும் பயிரிடுவதன் மூலம் கூடுதல் இலாபம் ஈட்டலாம்.

வேம்பு பூக்கும் பருவத்தில் செயற்கையாக தேன் பெட்டிகள் வைத்து வேப்பன்தேனை சேகரித்தும் விற்கலாம்.

இருவதிலிருந்து 25 அடி வரை உயரமாக வளரும் இந்த வேம்புநிலைக்கால் அல்லது வாசக்கால் போன்ற மிக பெரிய மரப்பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றன.

வேப்பமரம் முன்னூரிலிருந்து 500 ஆண்டுகள் வரை வாழக்கூடிய திறன் கொண்டது.

இத்தனை நன்மைகலையும் தன்னகத்தே கொண்ட  வேம்பின்  மூலம் வருமானமும் ஈட்ட முடியும் என்ற கூற்று எத்தனை பேருக்கு தெரியும்தெரிந்து கொள்வோமா

ஒரு ஏக்கருக்கு சுமார் 300 முதல் 500 மரங்கள் நடலாம் என்கின்றனர். 

எல்லா வகை மண் மற்றும் கரிசல்  பகுதீயில்  வளர்ந்தாலும் கூட எவ்வகை பாறை பகுதியிலும் வளரக்குடியது.

சித்திரைவைகாசி மற்றும் ஆனி அதாவது, [ஏப்ரல்மே மற்றும் ஜூன்] மாதங்களில் தான் வேம்பின் பருவ காலமாக  குறிப்பிடப்படுகின்றது.

வேம்பின் பூக்கள், இழைகள், வேப்பங்குச்சி பட்டை மற்றும் வேர்கள் ஆகியவற்றிற்கு மூலிகை சந்தையில் தனிப்பெறும் மதிப்பு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கிறது. 

அதனோடு கூட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான வேப்பம்பிண்ணாக்குஎன்னை, வேம்புத்தேன், சூரணம் மற்றும் பொடிகள், பூச்சிக்கொல்லி கரைசளுக்கும் நல்ல தேவை இருக்கிறது.

ஆகையால் இதை ஒரு தனி தொழிலாகவே எடுத்து சிறப்பாக செய்ய முடியும். 

வேப்பமரம் வளர்ப்பதன் மூலம் நம்மை சுற்றி வாழும் உயிரினங்களுக்கு சுவாசிக்க தேவையான நல்ல காற்றை உருவாக்கி தருகின்றோம்.

அது மட்டுமல்ல மண்ணிற்கு தேவையான இல்ஐ சத்து மற்றும் தலை சத்தை  தரக்கூடியதாகவும் இருக்கின்றன.   காய்ந்த வேம்பின் எந்த பகுதியை வேண்டுமானாலும்  பயன்படுத்தி புகை மூட்டி அதை   சிறந்த கொசு விரட்டியாகவும் பயன்படுத்தலாம்.

வேப்ப விதைகளை இடித்து, பொடியாக்கி அதை கங்கிலிட்டு,   அதிலிருந்து வரும் புகையை சிறியவர் முதல் பெரியவர் வரை சுவாசித்தாள் சளி தொல்லை மற்றும் சுவாச பிரச்சனைகளும் சீராகும். 

நம் கிராமங்களில் கொண்டாடப்படும் அம்மன் திருவிழாக்களை [வேம்பு திருவிழா] என்றும் குறிப்பிடலாம்.

வெற்றி மாலையாம் வேம்பு மாலை பாண்டிய மன்னர்களின் மார்பை அலங்கரித்தது என்பது தமிழகத்தை சேர்ந்த நமக்கெல்லாம் கூடுதல் சிறப்பல்லவா

வேண்டும் வரத்தை தருபவன் [வேந்தன்], வேண்டாத வரத்தையும் தருபவன் வேம்பரசன் தாணுங்களே 

மொத்தத்தில்  வேப்பமரம்  வேண்டாமல் கிடைத்த வரம் தாணுங்களே

போற்றி பாதுகாக்க நீங்க ரெடியா